ரஷ்ய ராணுவத்தில் நடப்பாண்டில் 3.85 லட்சம் வீரர்கள் இணைப்பு
நடப்பாண்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் பேரை புதிதாக ராணுவத்தில் இணைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அந்நாட்டின் முன்னாள் அதிபரும், பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெத்வதேவ், ஒவ்வொரு நாளும் ஆயிரத்து 600 பேர் தங்களை ராணுவத்தில் சேர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
உக்ரைன் உடனான போரில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், போர்க்களம் செல்வதற்கு மேலும் ஏராளமான வீரர்கள் தேவைப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே தங்கள் நாட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த 4 லட்சம் வீரர்கள் சண்டையிட்டு வருவதாக உக்ரைன் உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments