பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தி பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதாக ஹமாசுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம்
பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தி பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதாக ஹமாசுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோழைத்தனமான தீவிரவாத இயக்கம் என்றும் அவர் விமர்சித்தார். வாஷிங்டனில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேலுக்கு முழுஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது மக்களைப் பாதுகாக்கவும் தற்காத்துக் கொள்ளவும் இஸ்ரேலுக்கு முழு உரிமை இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் இயக்கம் பாலஸ்தீனத்தின் பெரும்பான்மை மக்களுக்குப் பிரதிநிதிகள் அல்ல என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Comments