அனைத்து கட்சியினருடன் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரத சாகு ஆலோசனை

0 826

வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் அரசியல் கட்சிகளை மட்டுமே தேர்தல் ஆணையம் சார்ந்திருக்க கூடாது என அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரத சாகு ஆலோசனை நடத்தினார்.

வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பெண்களின் வசதிக்காக இ-டாய்லெட் ஏற்படுத்தித் தர வேண்டுமென கூட்டத்தில் தி.மு.க.சார்பில் வலியுறுத்தப்பட்டதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான படிவங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்குமாறு அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட பூத் ஏஜென்ட் பட்டியலை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய பா.ஜ.க சார்பில் சுட்டிக்காட்டப்பட்டதாக அக்கட்சியின் துணைத் தலைவர் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments