இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்... ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

0 1133

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உகந்த சூழலை உருவாக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

கவுன்சிலில், இந்தியா சார்பில் பேசிய, நிரந்தர துணை பிரதிநிதி ரவீந்திரா, இஸ்ரேல் - ஹமாஸ் போரால் பெருமளவில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு குறித்த இஸ்ரேலின் கவலை நியாயமானது எனத் தெரிவித்த ரவீந்திரா, இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்னைக்கு அமைதியான வழியில், நீடித்த தீர்வு ஏற்பட உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments