அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... மருத்துவமனை ஊழியர் கைது

0 1331

கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் 2 மருத்துவ மாணவிகளுக்கு ஓராண்டு முன்பு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  படிக்கும் 2 மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் 2 பேரும் காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலமாக தனித்தனியாக 2 புகார் மனு அனுப்பியுள்ளனர்.

அந்த மனுக்களில், ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் சுசீந்திரம் காக்கமூர் பகுதியை சேர்ந்த வைரவன் என்பவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மனு மீது விசாரணை நடத்த உத்தரவிட்டதன்பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து வைரவனை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் இச்சம்பவம் கடந்த ஆண்டு நடந்திருப்பதும் வைரவன் 2 மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments