அண்ணாச்சி.. வர்ரார் வழிவிடு.. லங்போர்கினியில் மாஸா வந்து ஆட்டோ ஓட்டிய லெஜண்ட்..! சினிமா நாயகனுக்குரிய 10 பொருத்தமும் பளிச்..!

0 3817

சென்னை தியாகராய நகரில் லம்போர்கினி காரில் சென்று ஆயுத பூஜை விழாவில் பங்கேற்ற நடிகர் லெஜண்ட் சரவணன், உஸ்மான் சாலையில் ஆட்டோ ஓட்டிச்சென்று  ஆட்டோ தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினார்.

நாம எது செய்தாலும்... இந்த உலகம் , நம்ம உற்று நோக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் நடிகர் லெஜண்ட் சரவணன்..!

அந்தவகையில் தியாகராய நகரில் ஆயுத பூஜை விழாவுக்கு லம்போர்கினி காரில் , பளிச் கெட்டப்பில் வந்திறங்கினார் லெஜண்ட் சரவணன்.

ஆட்டோ ஓட்டுனர்களை வரவைத்து பரிசுகளோடு அறிவுரைகளையும் வாரி வழங்கிய லெஜண்ட் சரவணனை, தங்களுடன் ஒரு ரவுண்டு வருமாறு ஆட்டோ ஓட்டுனர்கள் அழைத்தனர்

தானே ஆட்டோ ஓட்டுவதாக களமிறங்கிய லெஜண்ட் சரவணன், உஸ்மான் சாலையில் ஆட்டோ ஓட்டிச்சென்றார். அவரை தொடர்ந்து மற்ற ஆட்டோக்களும் அணிவகுத்தது.

லம்போகினி காரில் வந்து ஆட்டோ ஓட்டிச்சென்ற லெஜண்டை காண கையில் செல்போனுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். தொழிலாளர்களுக்கு அட்வைஸ்... ஜாலியாக ஆட்டோ ரைடு... என லெஜண்ட் அக்மார்க் தமிழ் சினிமா நாயகனாகவே உருமாறிவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments