இந்திய ராணுவத்திற்கு 156 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்கத் திட்டம்

0 1435

இந்திய ராணுவத்திற்கு விரைவில் 156 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடிக்க ராணுவம் தயாராக உள்ளது.

AH-64E அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ராணுவத்தில் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ஒப்புதல் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலில் இருந்து கிடைப்பதற்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments