டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த தசரா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

0 1407

டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் தசரா விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு ஆளுயுர மாலை அணிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பொது மக்களுடன் இணைந்து ராமாயணத்தின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ராம் லீலா நாடகத்தை பார்வையிட்டார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஆயுதங்களை வைத்து பூஜை செய்து வணங்குவது எந்த நிலத்தையும் ஆக்கிரமிப்பதற்கு அல்ல என்றும், சொந்த நிலத்தை காக்கவே என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் உருவபொம்மைகளை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி அம்பு ஏய்ததும் மூன்று உருவபொம்மைகளும் தீப்பற்றி எரிந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments