தேர்தல் அறிக்கையை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் பொய் பேசுகிறார் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற 29 மாதங்களிலேயே மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம், பால் விலை மற்றும் நில வழிகாட்டி மதிப்பு, பத்திரப் பதிவு கட்டணம், மோட்டார் வாகன வரி ஆகியவற்றை பலமடங்கு உயர்த்தி நிர்வாக ரீதியாக படுதோல்வியை சந்தித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.முக.பொதுச் செயலாளர் இ.பி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க ஆட்சியில், மக்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்ன என்று கேட்டால், தேர்தல் அறிக்கையை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் பொய் பேசுகிறார்.
ஏனெனில், 29 மாத கால ஆட்சியில் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை, செயல்படுத்தவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மகளிர் இருசக்கர வாகன மானியத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவிட்டு, அந்த நிதியைக் கொண்டே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
Comments