நாகை மாவட்டம் போதிய தண்ணீர் இல்லாததால், ஒரு லட்சம் ஏக்கரில் 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பதிப்பு

0 945

நாகை மாவட்டம் திருக்குவளை பகுதியில் போதிய தண்ணீர் இல்லாததால், ஒரு லட்சம் ஏக்கரில் 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாதித்த நிலையில், தற்போது சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா பருவ சாகுபடியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.

போதிய தண்ணீர் இல்லாததால் கொடியலத்தூர், ஆதமங்கலம் வலிவலம், கண்ணாப்பூர், மருதூர், கச்சநகரம், சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாற்று விடுவதற்குப் பதிலாக நேரடி விதைப்பு முறையை மேற்கொண்ட நிலையில், மழை இல்லாததாலும் காவிரி தண்ணீர் கிடைக்காததாலும் விதைத்து ஒரு மாதமாகியும் விதை நெல் முளைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வயல்கள் வறண்டதால் விதைக்கப்பட்ட விதைநெல்களை பறவைகள் சாப்பிட்டு வருவதாக தெரிவித்த விவசாயிகள் பாதிக்கப்பட்ட குறுவை மற்றும் சம்பாவிற்கு உரிய இழப்பீட்டு வழங்க வலியுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments