அசுரனான ராவணனை வீழ்த்தி ராமபிரான் சீதையை மீட்ட நாளை தசராவாகவும், விஜயதசமியாகவும் இந்துக்கள் கொண்டாடப்படும் வெற்றியின் திருநாள்..!
அசுரனான ராவணனை வீழ்த்தி ராமபிரான் சீதையை மீட்ட நாளை இந்துக்கள் தசராவாகவும் விஜயதசமியாகவும் இன்று கொண்டாடுகிறார்கள். ஆயுதப் பூஜையைத் தொடர்ந்து சரஸ்வதி பூஜையும் இன்று கொண்டாடப்படுகிறது.
நவராத்திரிக்குப் பின்னர் பத்தாவது நாளான இன்றைய தினம் விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது ஐதீகம்...
அம்பாள் அசுர வதத்தை முடித்து வெற்றித் திருமகளாக, பக்தர்களுக்கு அறக்கருணை பொழியும் அன்னையாக அருள்பாலிக்கும் திருநாளே விஜய தசமி. இந்த நாளில் ஆயுர் தேவியைப் போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.
இன்று தசரா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. ராமாயாணத்தில் ராமபிரான் ராவணன தகனம் செய்து அசோகவனத்தில் சிறைப்பட்ட சீதாப்பிராட்டியை விடுவித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவில் தசரா திருநாளில், ‘ராம லீலா’ சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த நாளில், ராவணனின் உருவ பொம்மையை தீயிட்டு எரிப்பது வழக்கம்.
மேலும் இன்று மகாபாரத்தில் பாண்டவர்கள் இழந்த ஆயுதங்களையும் பலத்தையும் இந்நாளில் பெற்றதாகக் கூறப்படுகிறது. துர்க்கை அம்மன் கொடியவன் மகிஷாசூரனை வதம் செய்த பின்னர் உக்கிரம் தணிந்து அருள் பாலித்த நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது.
கர்நாடகாவில் தசரா என்பது சாமுண்டியைப் பற்றியது, வங்காளத்தில் தசரா, துர்கையைப் பற்றியது. இதைப்போல, அது பல்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு பெண்தெய்வங்களைப் பற்றியது,
காரிய சித்தி வழங்கும் வெற்றித் திருநாளாம் விஜயதசமியை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
Comments