ஆயுத பூஜை சிறப்புச் சந்தைக்காக மாற்று இடம் குறித்து மக்களுக்குத் தெரியாததால் விற்பனை இன்றி தேங்கிய பொருட்கள்

0 1318

ஆயுதபூஜையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சிறப்புச் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட டன் கணக்கிலான பூசணிகள், வாழைக் கன்றுகளை அப்படியே விட்டுச் செல்லும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மெட்ரோ ரயில் பணிகளை காரணம் காட்டி, வழக்கத்திற்குமாறாக, உணவு தானியக் கிடங்கு வளாகத்தில் சிறப்பு சந்தையை அமைக்க அனுமதிக்கப்பட்டது.

புதிய இடம் குறித்து பொதுமக்களுக்குத் தெரியாததால் 5 நாட்களாக விற்பனையே ஆகவில்லை எனக் கூறும் வியாபாரிகள், கடன் வாங்கி கொள்முதல் செய்து கொண்டு வந்த டன் கணக்கிலான பொருட்களை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments