டெல்லியில் நிலவும் கடுமையான மூடுபனி மற்றும் காற்று மாசுவை கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நடவடிக்கை
தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான மூடுபனி மற்றும் காற்று மாசு காரணமாக இரண்டாவது நாளாக மக்கள் மூச்சுவிட பெரும் சிரமப்பட்டனர்.
டெல்லியில் காற்று மாசு தரக் குறியீடு 306 என்ற மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால், கண் எரிச்சலாலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ள அம்மாநில அரசு, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார பேருந்துகளின் சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிர்க்கழிவுகளை விவசாயிகள் எரிப்பதே டெல்லி காற்று மாசுக்கு காரணம் எனவும், அவற்றை தடுப்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகளுடன் பேசியுள்ளதாகவும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
Comments