ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்ற லாரி ஏறி இறங்கியதில் 5 பசு மாடுகள் பலி

0 2719

திருவள்ளூர் மாவட்டம் கீழ்ச்சேரி பகுதியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஏறி இறங்கியதில் 5 பசு மாடுகள் உயிரிழந்தன.

அதிகாலை நேரத்தில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து மப்பேடு நோக்கி அந்த லாரி வேகமாக சென்ற நிலையில், அதன் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சாலையில் பசு மாடுகள் இருப்பதை அறியாமல் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments