பெங்களூரில் உரிம முறைகேடுகளில் ஈடுபட்டதாக 12 மதுபானக்கூடங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவு... சமீபத்தில் உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து மாநகராட்சி நடவடிக்கை
பெங்களூரு மாநகரில் உரிம முறைகேடுகளில் ஈடுபட்டதாக 12 மதுபானக்கூடங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், கோரமங்களா என்ற பகுதியில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து பெரும் தீவிபத்து ஏற்பட்டது. நான்காவது மாடியில் இருந்த அந்த உணவகத்தில் இருந்து கீழே குதித்த ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து, பெங்களூரு மாநகரம் முழுவதும் மதுபானக்கூடங்கள், உணவகங்கள், ஹுக்கா பார்கள் என 232 இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், உரிமத்தைப் புதுப்பிக்காதது, தடையில்லாச் சான்று இல்லாதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக 12 இடங்களை மூடவும், மேலும் 86 இடங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.
Comments