வருமானவரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.35 லட்சம் மோசடி... பாஜக நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

0 2349

வருமானவரித்துறையில் வேலை வாங்கிக் கொடுத்தது போல் போலியான பணி நியமன ஆணை தயார் செய்து 35 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாஜக நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

மேச்சேரியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவருக்கு வருமானவரி துறையில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு படிப்பு ஆவணங்களை சரிபார்ப்பது போன்றும், மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவைகள் நடத்துவது போன்றும் இறுதியாக போலியாக தேர்வு எழுதவைத்தும் கமலக்கண்ணன் நாடகமாடியதாகக் கூறப்படுகிறது.

இவற்றை எல்லாம் நம்பி அவர் கேட்ட 35 லட்ச ரூபாயை கொடுத்ததாகக் கூறும் சந்திரமோகனின் தந்தை, அஞ்சல் வழியாக போலி பணி ஆணையையும் கமலகண்ணன் அனுப்பி வைத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments