கேரளாவில் மனைவி மற்றும் மகனைய வெட்டி கொலை செய்த கணவன் தற்கொலை

0 2619

மனைவி மற்றும் மகனை வெட்டி கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் செதலயம் பகுதியைச் சேர்ந்த ஷாஜூ என்பவருக்கு பிந்து என்ற மனைவியும் பேசில் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

மகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஷாஜூ, பிந்துவுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

ஆயினும் பிந்துவை ஷாஜூ அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிந்து வசிக்கும் வீட்டிற்கு ஷாஜூ செல்ல தடை விதித்தது.

இந்நிலையில், பிந்துவின் வீட்டிற்கு சென்ற ஷாஜூ மனைவி
மற்றும் மகனை வெட்டி கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

வெளிநாட்டில் வசிக்கும் மகள் தாயை செல்ஃபோனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது நீண்ட நேரமாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அருகாமையில் வசிக்கும் உறவினரை வீட்டிற்கு சென்று பார்க்குமாறு செல்போனில் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து வீட்டிற்குச் சென்று உறவினர் பார்த்தபோது மூன்று பேரும் சடலங்கலாக காணப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments