தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை
தேசிய காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. லடாக்கில் 1959-ம் ஆண்டு சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 காவலர்கள் வீரமரணம் அடைந்ததை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி தேசிய காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனை ஒட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தி, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித்ஷா, போலீஸ் படை இல்லாமல் எல்லைப் பாதுகாப்போ, உள்நாட்டு பாதுகாப்போ சாத்தியமில்லை எனத் தெரிவித்தார்.
எவ்விதமான காலநிலையிலும், பண்டிகை தினத்திலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க பணியில் இருக்கும் காவலர்களின் வேலை கடினமானது எனக் கூறினார்.
பொதுமக்களின் உயிரை காப்பது முதல் ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும், காவல்துறை தன்னை நிரூபித்துள்ளதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.
Comments