கீரை பறிக்க சென்றபோது சேற்றில் சிக்கிக்கொண்ட விடிய விடிய வெளியே வரமுடியாமல் தவித்த மூதாட்டி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் சாலையில் தடப்பள்ளி வாய்க்காலில் கீரை பறிக்க சென்றபோது, சேற்றில் சிக்கி நபர் விடிய விடிய உயிருக்கு போராடியுள்ளார்.
கணபதிபாளையத்தை சேர்ந்த 80 வயதான பொன்னம்மாள், தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் கிடைக்கும் கிரை செடிகளை பறிப்பதற்காக நேற்று மாலை பாரியூர் சாலையில் உள்ள வாய்க்காலுக்கு வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி வாய்க்காலில் விழுந்த பொன்னம்மாள், சேற்றில் சிக்கினார். கொஞ்சம் கொஞ்சமாக கால் சேற்றில் இறங்கி அவரது இடுப்பு வரை புதைந்தது.
இதனால் பொன்னம்மாள் சேற்றில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. மாலை நேரம் என்பதாலும் விவசாய தொழிலாளர்கள் வேலை முடிந்து சென்று விட்டதாலும் யாரிடமும் உதவி கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விடிய விடிய சேற்றில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பொன்னம்மாள் தவித்துள்ளார். இன்று காலை விவசாய பணிக்காக அந்த வழியாக வந்த தொழிலாளர்கள், பொன்னம்மாளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதிகளவு சேறு இருந்ததாலும், ஆகாயத்தாமரை இருந்ததாலும் அவர்களால் பொன்னம்மாளை மீட்க முடியவில்லை.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பொன்னம்மாளை பத்திரமாக மீட்டு, சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments