தேசிய வில்வித்தை போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கல்லூரி மாணவி... சர்வதேச போட்டிக்காக சொந்தமாக வில் அம்பு வாங்க முடியாமல் தவிப்பு

0 3559

இந்தோனேஷியாவில் நடக்கவுள்ள சர்வதேச வில்வித்தை போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தபோதும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சொந்தமாக வில் அம்பு வாங்க வசதியில்லாததால் உதவிக்காக காத்திருக்கிறார்.

சாத்தங்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான பக்கிரிசாமி - செம்மலர் தம்பதியின் மகள் அஜிஷா அரசு கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

தேசிய அளவிலான போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற அஜிஷா இதுவரைக்கும் பங்கேற்ற போட்டிகளில், பயிற்சி மையத்தில் கொடுக்கப்பட்ட மரத்தாலான வில் அம்புகளை பயன்படுத்திவந்தார்.

சர்வதேச போட்டியில் விளையாட மூன்றரை லட்சம் ரூபாயிலான காப்பரால் செய்யப்பட்ட வில்-அம்பை வாங்க மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என அஜிஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments