சமூக வலைதளங்கள் மூலம் இந்தியர்களிடம் ரூ.300 கோடிக்கும் மேல் வேலை வாய்ப்பு, கடன் தருவதாகக் கூறி UPI மூலம் பணம் மோசடி
சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் மூலம் இந்தியர்களிடம் இருந்து 357 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வெளிநாட்டு வலையமைப்பை சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகவலைதளங்கள் மூலம் பண மோசடி செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து கடந்த ஆண்டு ஆப்ரேஷன் சக்ரா 2 என்ற நடவடிக்கை தொடங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சமூக வலைதளங்கள், சேட்டிங் தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பு, முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக உறுதியளித்து UPI மூலம் பணத்தை டெபாசிட் செய்ய பயனாளர்கள் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இறுதியில் இந்தப் பணம் கிரிப்டோ கரன்சி மூலம் தங்கமாக மாற்றப்பட்டதாகவும் சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 137 நிறுவனங்கள் தொடர்பில் இருந்ததாகவும், கொச்சி, பெங்களூரு மற்றும் குர்கானில் நடத்தப்பட்ட சோதனையில் 357 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், இதில் வெளிநாட்டு நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பையும் கண்டுபிடித்துள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
Comments