விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோரை வீட்டை விட்டு விரட்டியடித்த மூத்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் தீக்குளிக்க முயற்சி

0 1614

தங்களை  சொந்த வீட்டை விட்டு வெளியேற்றி பொருட்களையும் வெளியில் வீசி எறிந்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் காவல்நிலையம் முன்பாக பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர்.

பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்தவர் திரிசங்கு  சிவபாக்கியம்  தம்பதிக்கு  4 மகள்களும் 2 மகனும் உள்ளனர்.இந் நிலையில் மூத்த மகன் ஏழுமலை பெற்றோரின் வீட்டில் குடிபுகுந்து அவர்களின் பொருட்களையும் வெளியில் வீசி எறிந்துள்ளார்.

மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திரிசங்கு, மனைவியுடன் தீக்குளிக்க முயன்றார். அங்கு இருந்த காவலர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments