உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில் மத்திய அரசு தாமதப்படுத்துவது கவலை அளிக்கிறது - உச்ச நீதிமன்றம்
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில் மத்திய அரசு தாமதப்படுத்துவது கவலை அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்குப் பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நீதிபதிகளின் இடமாற்றம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் நிலைப்பாடு நீதிபதிகளின் பணி மூப்புக்கு இடையூறாக இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இதனால் குழப்பம் மற்றும் சிக்கல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள கோப்புகள் சரி செய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
Comments