இந்தியாவில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு - மத்திய அரசு

0 1355

இந்தியாவில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய, சிவில் விமானப் போக்குவரத்துச் செயலர் வும்லுன்மாங் வுவல்னம் , இந்தியாவில் தினமும் 2 ஆயிரத்து 900 விமானங்கள் இயக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதனை அதிகரிப்பதற்கு பெரிய விமான நிலையங்களின் ஓடுதளங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments