திருவொற்றியூரில் மஞ்சள் நிறமாக வரும் குடிநீரால் மக்கள் அவதி... முறையான குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
சென்னை அடுத்த திருவொற்றியூர் 7 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மஞ்சள் நிறமாக வருவதாகக் கூறி அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் ராதாகிருஷ்ணன் நகர், கார்கில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் முறையாக வருவதில்லை என அப்பகுதி வாசிகள் குற்றம் சாட்டினர்.
மஞ்சள் நிறமாக மாறிய தண்ணீரைக் குடிப்பதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் குடிப்பதற்கு 20 ரூபாய் கொடுத்து கேன் தண்ணீரை வாங்கும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
Comments