நாட்டின் முதல் அதிவிரைவு பிராந்திய ரயில் சேவையான ரேபிட்எக்ஸ் நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
நாட்டின் முதல் அதிவிரைவு பிராந்திய ரயில் சேவையான ரேபிட்எக்ஸ் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
குறுகிய தூரம் கொண்ட இரு நகரங்களை இணைக்கும் வகையில் ரீஜினில் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் என்ற சேவையை ரயில்வே துறை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, டெல்லி- காசியாபாத்- மீரட் இடையே வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதன் முதல் கட்ட பணி முடிவடைந்து முதல் ரயில் சேவை சாஹிபாபாத் - துஹாய் டிப்போ இடையே இன்று தொடங்கியது.
ரயிலில் மாணவ, மாணவிகளுடன் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ரயில் ஓட்டுநர் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த ரேபிட்எக்ஸ் நமோ பாரத் ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments