காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும்: இ.பி.எஸ்.
அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு துணை போகாமல், சட்டத்தின் மாண்பைக் காக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் காவல் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து மக்கள் அஞ்சி வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காவல் நிலையங்களில் 90 சதவீத வழக்குகள் பதிவு செய்யப்படாமல் கட்டப் பஞ்சாயத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரிலான நடவடிக்கையில், வழக்குகளின் எண்ணிக்கைக்கும், கைதானவர்களின் எணிக்கைக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதாக இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments