காதல் வேணாம்டா கண்ணுங்களா.. அம்மா படும் வேதனையை பாருங்க.. மாணவிகளை அழவைத்த தாமு..! இரு மாணவர்கள் அழுது மயங்கினர்

0 5045

உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் தாமு, படிக்கின்ற வயதில் காதல் வேண்டாம் என்றும் தாயும், ஆசிரியரும் படும் கஷ்டங்களை உருக்கமாக பேசியதால் மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுத நிலையில் இரு மாணவர்கள் அழுது மயங்கி விழும் நிலை ஏற்பட்டது

செல்லுமிடம் எல்லாம் தனது உருக்கமான பேச்சால் மாணவர்களின் சிந்தனையை தூண்டி , மனதுக்குள் வார்த்தையால் இரங்கி அழவைப்பது நடிகரும் பேச்சாளருமான தாமுவின் வழக்கம். அந்தவகையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஏற்பாட்டின் பேரில் நடந்த தேர்வு தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்று தாமு பேசினார். சினிமா காதல், ஃபைட்டு எல்லாம் டூப்ளிகேட் அதனை யெல்லாம் நம்பி நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்

பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்க, அன்னை படும் கஷ்டங்களை ஒவ்வொன்றாக தனது உருக்கமான குரலால் தாமு சொல்லச் சொல்ல கூடியிருந்த மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழ தொடங்கினர்.

தாய் குழந்தையை பெற்றெடுக்க படும் பாட்டையும், ஆசிரியர்களின் மகத்துவத்தையும் தாமு, சொன்ன வார்த்தைகளை கேட்டு பெரும்பாலான மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

மாணவிகளை போலவே தனியார் பள்ளி மாணவர்களும் கண்ணீர் விட்ட நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர், எங்கே நாம் திருந்திவிடுவோமோ என்று பயந்து தாமுவின் பேச்சை கேட்காமல் எழுந்து ஓடிவிட்டனர்.

அவர்களில் இரு மாணவர்கள் தாமுவின் பேச்சைக்கேட்டு அழுது மயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னணி இசையுடன் , தாமுவின் வார்த்தைகள் மனதுக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தால் மாணவிகள் ஒவ்வொருவரும் கண்ணீர் விடுவதாக கூறும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், தங்கள் பெற்றோரின் நிலையை உணர்ந்தாலே போதும், மாணவ, மாணவிகளிடம் கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு விடும் என்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments