ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார்
பங்காரு அடிகளார் காலமானார்
மாரடைப்பால் உயிர் பிரிந்தது
ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) காலமானார்
ஆதி பராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குருவாக விளங்கியவர் பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூரில் மாரடைப்பால் பங்காரு அடிகளாரின் உயிர் பிரிந்ததாக தகவல்
தம்மை பின்பற்றுவோர் மற்றும் ஆதி பராசக்தி கோயில் பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார்
கோயில் கருவறைகளில் பெண்களும் பூஜை செய்யலாம் என்ற வழக்கத்தை பரவலாக்கியது மேல்மருவத்தூர் சித்தர் பீடம்
ஆதி பராசக்தி மருத்துவ, கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவராக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார்
மனித குலத்துக்கு செய்த சேவைக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பங்காரு அடிகளாருக்கு கடந்த 2019-இல் வழங்கப்பட்டது
பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்மாள் என்ற மனைவியும் ஜி.பி. அன்பழகன், ஜி.பி. செந்தில் குமார் என்ற 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்
விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் பிறந்த பங்காரு அடிகளாரின் இயற்பெயர் சுப்பிரமணி
சோத்துப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராக ஆரம்பக் கட்டத்தில் பணியாற்றி வந்தவர் பங்காரு அடிகளார்
1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு மருவத்தூரில் மரத்தடி ஒன்றில் அமர்ந்து குறி சொல்லிவந்தார் பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூர் கோயில் அருகிலேயே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி ஒன்றை கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர் பக்தர்கள்
பங்காரு அடிகளார் உடலுக்கு நாளை காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
பங்காரு அடிகளாருக்கு வானதி சீனிவாசன், டி.டி.வி. தினகரன், செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் இரங்கல்
ஆன்மீகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமையும், சிறப்பும் கொண்டவர் பங்காரு அடிகளார்: ராமதாஸ் இரங்கல்
சாமானிய மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆன்மீக கருத்துகளை பதிய வைத்தவர் பங்காரு அடிகளார்: ஆளுநர் தமிழிசை
Comments