வானத்தில் நீண்டதூரம் சென்று தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்திய விமானப்படை

0 13025

வானத்தில் நீண்டதூரம் சென்று தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இதற்காக பிரமோஸ் ஏவுகணை, வங்காள விரிகுடாவின் தெற்கு தீபகற்பப் பகுதியில் உள்ள விமான தளத்திற்கு Su-30 MKI என்ற போர் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு விமானத்தில் இருந்த வெளியேறிய ஏவுகணை ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவு சென்று தரையில் உள்ள இலக்கை குறி தவறாமல் தாக்கி அழித்தது.

இது முந்தைய சோதனைகளை விட மிக அதிக தொலைவு என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிக்ள் தெரிவித்து உள்ளனர். SU-30 MKI  வகை விமானங்கள் நீண்ட தூரத்தில் உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்டவை ஆகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments