காஸ்மிக் கதிர்களின் தோற்றம் குறித்து ஆராய்வதற்காக உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது சீனா
காஸ்மிக் கதிர்களின் தோற்றம் குறித்து ஆராய்வதற்காக உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
மேற்கு பசிபிக் பெருங்கடலில் 3 ஆயிரத்து 500 மீட்டர் ஆழத்தில் இந்த நியூட்ரினோ தொலைநோக்கியை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொலைநோக்கியை அமைக்கும் பணிகள் 2030ம் ஆண்டுக்குள் நிறைவடையும் போது, அது உலகிலேயே மிகப் பெரியதாகவும், உயர்தரத்துடனும் இருக்கும் என்று திட்டக்குழு தெரிவித்துள்ளது. காஸ்மிக் நியூட்ரினோக்கள் நீர் மூலக்கூறுகளுடன் மோதும்போது உருவாகும் ஒளிரும் தன்மை மூலம் பிரபஞ்சம் குறித்த சந்தேகங்களைத் தீர்க்க முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Comments