சமைக்கத் தெரியாததால் மனைவியை விவாகரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம்

0 1704

கேரள உயர்நீதிமன்றத்தில் மனைவிக்கு சமைக்கத் தெரியாததை முக்கிய காரணாமாக கூறி விவாகரத்து கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மனைவிக்கு சுவையாக சமைக்க தெரியாதது  கணவரைக் கொடுமைப்படுத்துவதாக கருத முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மனைவியை விவாகரத்து செய்ய கணவர் தமது மனுவில் பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

அதில் உறவினர்கள் முன்னிலையில் மனைவி தன்னை அவமானப்படுத்தியதாகவும்,தனது முதலாளியிடமும் தம்மைப்பற்றி  புகார் அளித்துள்ளதாக கணவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த மனைவி தமது கணவரின் பாலியல் வக்கிரங்களை குறிப்பிட்டு தமது கணவரை இயல்பான வாழ்க்கைக்கு மாற்றவே தாம் முயற்சித்ததாக விளக்கம் அளித்தார். மனைவியின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விவாகரத்து கோரும் மனுவை நிராகரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments