இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

0 1635

இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆறுதல் கூறினார்.

அதில் 5 தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் 20 மணி நேரம் சிறைவைக்கப்பட்டு தீரத்துடன் போராடிய 65 வயது மூதாட்டியை ஜோபைடன் சந்தித்துப் பேசினார்.

ரேச்சல் எட்ரி என்ற அந்தப் பெண்மணி தமது கணவர் டேவிட்டுடன் ஹமாஸ் தீவிரவாதிகளால் தமது வீட்டுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டார்.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை சூழ்ந்துக் கொண்ட போது வெடிகுண்டின் பின்னை விடுவித்து அதை ரேச்சலின் தலைமீது வைத்து இஸ்ரேல் படைகளுடன் தீவிரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினார். ஒரு தீவிரவாதியின் கையில் காயத்துக்கு கட்டு போட்டு சாமர்த்தியமாக தீவிரவாதிகளுடன் பேசிக் கொண்டே காலம் கடத்தியதாகவும் பிஸ்கட்டுகளுடன் தேநீர் போட்டுத் தந்ததாகவும் அவர் விவரித்தார்.

முதலில் அந்த வீட்டை குண்டுவீசித் தகர்க்க நினைத்த இஸ்ரேல் படைகள் அது ஒரு காவல் அதிகாரியின் வீடு என்றும் அவர் பெற்றோர் வீட்டுக்குள் சிக்கியிருப்பதை அறிந்தும் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தினர். ஒரு கட்டத்தில் இஸ்ரேல் படைகள் அதிரடியாக வீட்டுக்குள் உள்ளே புகுந்த போது தமது கணவர் டேவிட் பாய்ந்து தம்மை பாதுகாத்ததாகவும் ரேச்சல் அந்த பயங்கர சம்வத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments