லிஃப்ட் வசதி இல்லாத சிறு அடுக்குமாடி பொது பயன்பாட்டு மின் கட்டணம் குறைப்பு: முதலமைச்சர் ஸ்டாலின்

0 1309

10 அல்லது அதற்கு குறைவான வீடுகள் உள்ள லிஃப்ட் வசதி இல்லாத சிறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொதுப்பயன்பாட்டிற்கான மின்சாரத்துக்கு புதிய கட்டண சலுகை முறை அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மறைமலை நகரில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்ற கள ஆய்வில் பேசிய முதலமைச்சர், சென்னை மற்றும் பிற நகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உள்ள சிறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இந்த புதிய கட்டண முறை பொருந்தும் என்றார்.

ஓ.எம்.ஆர். சாலையில் நடைபெறும் மெட்ரோ பணிகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments