பெண்ணின் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்ட உலோகத் துண்டு டெலி ப்ரோங்கோஸ்கோபி சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றம்
பெண்ணின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த உடைந்த உலோகத் துண்டை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், 8 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி, டிராக்கியஸ்டமி உலோகக் குழாய் வழியாக சுவாசித்துக் கொண்டிருந்தார்.
அந்தக் குழாய் பழுதடைந்து, உடைந்து மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்ட நிலையில், கடந்த 12ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அன்றைய தினமே சிகிச்சையில் இறங்கிய மருத்துவர்கள், டெலி ப்ரோங்கோஸ்கோபி கருவி மூலம் உலோகத் துண்டை அகற்றினர்.
பிளாஸ்டிக், இரும்பு உட்பட எவ்விதமான பொருட்களாக இருந்தாலும் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் சிக்கிக் கொண்டால், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுமாறு மருத்துவர்க்கள் அறிவுறுத்துகின்றனர்.
Comments