மோதினது யாரு.. லியோ டீம் காருல்ல.. அதான் அப்படி ஏறி நிக்குது..! விரலை உயர்த்தி எச்சரிக்கை

0 5612

லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி, சென்னை தலைமை செயலகத்துக்கு மனு அளிக்க சென்ற வழக்கறிஞர் குழுவுடன் வந்த கார் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி ஏறி நின்றதில் அதனை ஓட்டி வந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி, சென்னை தலைமை செயலகத்துக்கு மனு அளிக்க வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் வந்தனர்

தலைமை செயலகத்தில் மனு அளித்து விட்டு கார்த்திகேயன் குழுவினர் காரில் ஏறிச் சென்ற நிலையில், அவர்களுடன் வந்த கார் ஒன்று அதிவேகத்தில் புறப்படத் தயாரான போது பெண் ஒருவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. அதனை ஓட்டி வந்த பெண் கீழே விழுந்தார். கார் இரு சக்கர வாகனத்தின் மீது ஏறி நின்றது.

இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் கார் ஒன்று இரு சக்கரவாகனத்தின் மீது ஏறி நின்றதால் அனைவரும் வியப்புடன் பார்த்தனர். விபத்தை ஏற்படுத்தியவர்கள் காரை தூக்கி அதன் அடியில் சிக்கி இருக்கும் இரு சக்கர வாகனத்தை வெளியே எடுப்பதற்காக மீட்பு வாகனத்தை அழைத்துவிட்டு காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவர் அங்கு நின்றிருந்த வழக்கறிஞர் ஒருவரை கையை பிடித்து இழுத்து விசாரணைக்கு வருமாறு அழைத்ததால் அவருடன் வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் போலீசார் மற்றும் உடன் நின்ற வழக்கறிஞர்கள் சமாதானம் செய்த நிலையில், ஆவேசம் குறையாத வழக்கறிஞர், தன்னை இழுத்த உதவி ஆய்வாளரை நோக்கி கையை உயர்த்தி எச்சரித்தபடியே சென்றார்.

இந்த விபத்து தொடர்பாக கோட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments