மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு.. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று தகவல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்துவதற்கு இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஒப்புதல் அளித்தால் தற்போதைய 42 சதவீத அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். ஜூலை 1- ஆம் தேதியை முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்த்தப்படலாம்.
நவம்பர் மாதத்தில் சம்பளத்துடன் ஜூலை முதல் நவம்பர் வரையிலான தொகை கணக்கிட்டு வழங்கப்படும். இதனால் 47 லட்சம் அரசு ஊழியர்களும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
Comments