கடந்த 8 மாதங்களில் இல்லாத வகையில் கோதுமையின் விலை 1.6 சதவீதமாக அதிகரிப்பு..!
கடந்த எட்டு மாதங்களில் இல்லாத வகையில் கோதுமையின் விலை ஒன்று புள்ளி 6 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு மெட்ரிக் டன் கோதுமை விலை 27 ஆயிரத்து 390 ரூபாயாக உள்ளது.
பண்டிகை சீசன் காரணமாக, தேவையும் விநியோகமும் அதிகரித்திருப்பதே விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. கோதுமை விலை மேலும் உயர்ந்தால் உணவுப் பணவீக்கமும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு விதிக்கப்படும் 40 சதவீத வரியைக் குறைக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
தட்டுப்பாடு ஏற்படாதிருக்கவும், விலைவாசி கட்டுக்குள் இருக்கவும் அரசுக் கிடங்குகளில் உள்ள கோதுமையை மத்திய அரசு வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments