மஞ்சள் காய்ச்சல், தக்காளி காய்ச்சல் என வித விதமான காய்ச்சல்கள் தி.மு.க. ஆட்சியில் வருகிறது - ஜெயகுமார்

0 2048

மஞ்சள் காய்ச்சல், தக்காளி காய்ச்சல் என வித விதமான காய்ச்சல்கள் தி.மு.க. ஆட்சியில் வருவதாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், ஓட்டமாக ஓடும் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் மக்களின் டெங்கு காய்ச்சலை தடுக்க என்ன செய்தார்? என்று வினவியுள்ளார்.

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் குழந்தைக் கடத்தல் நடப்பதாக குறிப்பிட்டுள்ள ஜெயகுமார், காவல் துறை சுதந்திரமாக கடமையைச் செய்து குழந்தைக் கடத்தலை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments