டெல்லி - மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் ரயில் தடத்தினை வரும் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் ரயில் தடத்தின் ஒரு பகுதி இணைப்பை பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
17 கிலோமீட்டர் தூரம் வரை 5 ரயில் நிலையங்களை இப்பாதை கடந்து செல்கிறது. ஷாஹிபாத், காசியாபாத், குல்தார், துஹாய், மற்றும் துஹாய் டெப்போ ஆகிய 5 ரயில் நிலையங்களில் இந்த ரயில் பயணிக்க உள்ளது.
முழு அளவிலான பாதை வரும் 2025ம் தேதி தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 12ம் தேதி உத்தரப்பிரதேச முதலமைச்சர் இந்த ரயில் தடத்தின் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
ஒரு மெட்ரோ ரயில் 100 கிலோமீட்டர் தூரத்தை 3 மணிநேரத்தில் அடையும் என்றால் இந்த ரேபிட் விரைவு ரயில் அதனை ஒருமணி நேரத்திற்குள் அடைந்து விடும்.
Comments