செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தீர்ப்பு தள்ளிவைப்பு..!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தீர்ப்பு தள்ளிவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி தீர்ப்பை தள்ளிவைத்தார்
உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் 45வது பிரிவு பொருந்தாது என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம்
செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது அவருடைய தற்போதைய உடல் நிலைக்கு சாத்தியமில்லாதது: அவரது வழக்கறிஞர்
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு
நீதிமன்ற காவலில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை செந்தில் பாலாஜிக்கு இல்லை - அமலாக்கத் துறை
ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் உட்கார முடியவில்லை என செந்தில் பாலாஜி கூறுகிறார். அவ்வாறு உட்கார அவர் நிர்பந்திக்கப்படவில்லை - அமலாக்கத்துறை
நிச்சயம் சாட்சிகள், ஆதாரங்கள் கலைக்கப்படமாட்டாது என செந்தில் பாலாஜி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது
நீதிமன்றமே மருத்துவரை நியமித்து செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஆய்வு செய்யலாம் - செந்தில் பாலாஜி தரப்பு
Comments