போயஸ்கார்டனில் உணவகத்திற்கு சாப்பிட வந்தவருக்கு ஏற்பட்ட சோகம்

0 10528

சென்னையில் உணவகத்துக்கு சாப்பிட வந்த ஒருவரின் புதிய சொகுசு காரை உணவக ஓட்டுநர் கண்மூடித்தனமாக ஓட்டி மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலை மூன்றாவது தெருவில் இயங்கி வரும் மஞ்சள் உணவகத்தில் நேற்றிரவு  வாடிக்கையாளர் ஒருவர் தனது சொகுசு காரில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவரது காரை  உணவக ஊழியர் காளிராஜ் என்பவர் பார்க்கிங் செய்வதாக கூறி கதீட்ரல் சாலைக்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அவர் அந்த வாகனத்தை அதிவேகமாக இயக்கி, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதியதில் டாட்டா சொகுசு வாகனம் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி அப்பளம்போல் நொறுங்கியது.

  இதில் காளிராஜ் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும்  ஞாயிற்றுக்கிழமை என்பதால் கத்திட்ரல் சாலையில் வாகன நெரிசல் குறைவாக இருந்ததால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments