நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம்... உரிய நேரத்தில் கோவில் நடை திறக்கப்படாததால் பூசாரியிடம் வாக்குவாதம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
3 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு 3 ஆயிரத்து 700 படிகளில் ஏறி செல்ல வேண்டும்.
இந்த நிலையில் அதிகாலை பயணம் மேற்கொண்ட பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ததற்காக காலை 6 மணி முதல் 10 மணி வரை நடை திறக்கப்படாததால் அவதிக்கு உள்ளானார்கள்.
தொடர்ந்து உள்ளே இருந்த பூசாரியிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை கோவில் கதவு திறக்கப்பட்டது. இதன் பிறகுதான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Comments