லியோ காம்போ ஆஃபர்.. ஆப்படிக்க காத்திருக்கும் கோவை மாவட்ட நிர்வாகம்..!
கோவை கேஜி சினிமாஸ் திரையரங்கில் காம்போ ஆஃபர் என்று லியோ திரைப்பட டிக்கெட் ஒன்று 450 ரூபாய்க்கு விற்கப்படும் வீடியோ வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
லியோ டிக்கெட் தனியாக தரமாட்டாங்களாம் 450 ரூபாய் காம்போ ஆஃபரில் தான் தருவோம் என்று வம்பில் சிக்கியுள்ள டிக்கெட் விற்பனையாளர் இவர் தான்..!
கோவை கே.ஜி.சினிமாசில் , லியோ படத்துக்கான டிக்கெட் முன்பதிவுக்கு சென்ற ரசிகரிடம், டிக்கெட் விலை 450 ரூபாய் என்று கூறியவர் கோக் தர்றோம்.., பாப்கார்ன் தர்றோம்.. காம்பொ ஆஃபர் என்று கூறி பேரம் பேசிய காட்சிகள் தான் இவை..!
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் கட்டணத்துக்கு டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று அரசு கடுமையாக எச்சரித்த நிலையில் தனி டிக்கட் வேணுமா 700 ரூபாய் என்றும் மால்களில் 1500 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுவதாகவும் கூறி கறாராக காசு பார்க்கும் ஆசாமி மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்தது
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணத்திற்கு டிக்கெட் விற்கும் ஆசாமிகளை பிடித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments