கட்டிடத்தொழிலாளியை கட்டி வைத்து தாக்கியதாக திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது புகார்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கட்டிடத்தொழிலாளியை கட்டி வைத்து கட்டையால் தாக்கியதாக திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி மணிகண்டன் தனது வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
வாடகை கொடுக்கல் வாங்கலில் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. பூபதிக்கு ஆதரவாக செயல்பட்ட திமுக ஒன்றியச் செயலாளரும் ஊராட்சி மன்றத் தலைவருமான கன்னிமுத்து என்பவர் பூபதி தங்கியிருந்த வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சாவியை கேட்கச் சென்ற மணிகண்டனை தனது தோட்டத்துக்கு வருமாறு அழைத்த கன்னிமுத்து அவரை அறையில் அடைத்து வைத்து, கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
கன்னிமுத்து தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments