தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு தமிழில் எழுதக்கூட தெரியவில்லை - வைரமுத்து வேதனை
மொழி உணர்வு உள்ளத்தில் இருக்கும்போது யாரும் தமிழ் மொழியை அழித்துவிட முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தமிழ் இயக்கத்தின் 6ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்று பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, வேறு மொழி சொல் கலக்காமல் தமிழ் பேசும் நபர்களை தேட வேண்டியிருப்பதாகவும் பத்தாம் வகுப்பு படிக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கு தமிழில் எழுதக்கூட தெரியவில்லை என்றும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளதை சுட்டிக்காட்டிய வைரமுத்து, அண்மையில் காட்சியை சொல்லி கவிதை ஒன்றை கேட்டபோது அருமையான கவிதை கிடைத்ததாக கூறினார்.
தமிழர் கலாச்சாரம், பண்பாடு சிதையாமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Comments