திருவனந்தபுரத்தில் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. மலையோர பகுதிகளில் மண்சரிவு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடரும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தேக்கு மூடு காலனி, கழக்கூட்டம், கண்ணமூலா, புத்தம்பாலம், போத்தங்கோடு, ஸ்ரீ காரியம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து பல பகுதிகளில் அரசு முகாம்களை அமைத்துள்ளது. தாலுகா வாரியாக உதவிக்கு கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று விடுமுறை தினம் என்றபோதிலும், வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவரும் பணிக்கு அழைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரத்திற்கு உட்பட்ட மலையோர பகுதிகளான விதுரா, நெடுமங்காடு உள்ளிட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கொச்சு வேலி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால் டெல்லி செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
Comments