திட்டக்குடி அருகே போதிய மழை இல்லாததால் 5000 ஏக்கர் மக்காச்சோள பயிர் பாதிப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, 5000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர் கதிர் பிடிக்கும் நிலையில், போதிய மழை இல்லாததால் கடும் வெயிலால் கருகி வருகிறது.
புலிவலம், கீரனூர் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரில் கதிர்கள் வளர்ச்சி குன்றி இருப்பதாகவும், ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சக்திவாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததால், கால்நடைத் தீவனமாகக்கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments