ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் 5 விசைப் படகுகளுடன் சிறைபிடிப்பு... எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்த இலங்கை கடற்படை
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 விசைப்படகையும் அதிலிருந்த 28 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் ஒரே நாளில் அடுத்தடுத்து சிறைபிடித்து சென்றுள்ளனர்.
தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 படகையும் அதிலிருந்த 15 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் மாலை கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 படகையும், மண்டபம் பதிவெண் கொண்ட ஒரு விசைப்படகு மற்றும் கோட்டைபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகு என மொத்தமாக 3 படகையும் அதிலிருந்த 13 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments