இஸ்ரேலில் இருந்து 197 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது 3வது சிறப்பு விமானம்

0 4739

இஸ்ரேலில் இருந்து 197 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம் நள்ளிரவில் டெல்லிவந்து சேர்ந்தது. மத்திய இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்று தேசியக் கொடிகளை வழங்கினார். விமானத்தில் வரும்போதும் பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிட்டனர்.

இதனிடையே 4வது விமானம் ஒன்று சுமார் 274 இந்தியர்களுடன் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்துக் கொண்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமது டிவிட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments